நம்மில்
பலர் நம்முடைய வலைப்பதிவுகளின் முதல் பக்கத்தில் (Home Page) ஐந்து
அல்லது பத்திற்கு மேற்பட்ட பதிவுகளை கொண்டுவர நினைப்போம். ஆனால் அப்படி
செய்தால் முதல் பக்கத்தின் நீளம் அதிகமாகிவிடும். அதை குறைக்க உதவுவது
தான் Read More Option. அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
நம்முடைய
ஒவ்வொரு பதிவுகளை முதல் பக்கத்தில் முழுவதும் பிரசுரிக்காமல், சில
பத்திகளை மட்டும் பிரசுரித்து, முழுவதும் படிக்க அந்த பதிவை க்ளிக்
செய்தால் முழு பதிவையும் படிக்குமாறு வைக்க உதவுகிறது Read More Option.
புதிய
பதிவுகளை எழுதும் பக்கத்தில் சென்று பதிவுகளை எழுதி முடித்திடுங்கள். எழுதி
முடித்த பின் எந்த பகுதி வரை முதல் பக்கத்தில் தெரிய வேண்டுமோ அந்த
இடத்தில் Cursor-ஐ வைத்து, மேலே இருக்கும் பட்டன்களில் Jumb Break என்ற
பட்டனை அழுத்துங்கள். உடனே ஒரு கோடு நீங்கள் Cursor-ஐ வைத்த இடத்தில்
தெரியும். பிறகு Publish Post என்ற பட்டனை அழுத்தவும்.
அவ்வளவு தான்.. இனி உங்கள் வலைப்பதிவுகளின் முதல் பக்கத்தின் நீளம் அதிகமாகாமல் அதிக பதிவுகளை தெரிய வைக்கலாம்.
வேர்ட்ப்ரஸ் தளத்தில் Jumb Break என்ற பட்டனுக்கு பதிலாக More என்ற பட்டன் இருக்கும்...
ஆனால்
ப்ளாக்கரில் Automatic Read More உள்ள டெம்ப்ளேட்டை
பயன்படுத்துபவர்களுக்கு பக்கங்கள் (Pages) உருவாக்குவதில் பிரச்சனை
ஏற்படும். அதை எப்படி சரிசெய்வது என்று அடுத்த பதிவில் காண்போம், இறைவன்
நாடினால்...