Sunday, July 17, 2011

கூகிளின் +1 பட்டன் அறிமுகமானது; வலைப்பூவில் சேர்ப்பது எப்படி?

இணைய உலகின் மன்னனான கூகிளுக்கு இருந்த பெரிய தலைவலி மற்ற சமுக வலைத்தளங்களில் பரிமாறிக் கொள்ளப்படும் செய்திகள், பதிவுகள், வலைத்தளங்களைப் பற்றி கணிக்க முடியாமல் இருந்தது தான். ஏனெனில் எல்லோரும் டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் அவர்களுக்குப் பிடித்த தளங்களின் இணைப்புகளைப் பரிமாறிக் கொள்ளும் போது கூகிளுக்கு இதைப் பற்றி முழுதும் அறிந்து
கொள்ள முடியாமல் போனது. எந்த வலைத்தளங்கள் அதிகம் பிரபலமடைகின்றன, எந்தெந்த தளங்களை கூகிள் தேடலில் முன்னிலைப் படுத்துவது என்று தெரியாமல் தடுமாறியதற்கு தீர்வாக Facebook Like பட்டனைப் போன்று +1 (Google PlusOne) என்ற பட்டனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பட்டன் வலைத்தளங்களை தரம்பிரிக்க உதவுகிறது. சில நேரம் கூகிள் தேடலில் தேடி சில தளங்களுக்குச் சென்றால் உள்ளே நாம் தேடி வந்த தலைப்பு மட்டும் சரியாக இருக்கும். பதிவில் ஒன்றும் இருக்காது. இந்த மாதிரி சிக்கல்களுக்கு கூகிள் தேடலில் எந்த தளங்களை முன்னுக்குக் கொண்டு வந்து காட்டலாம் என்று பயனர்களின் விருப்பங்களை அறிய இந்த பட்டனை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த பட்டனை நமது வலைத்தளத்தில் சேர்த்து விட்டால் பதிவுகளைப் படிக்கும் வாசகர்கள் அந்த பட்டனைக் கிளிக் செய்து விட்டால் போதும். அது கூகிளின் எஞ்சின் பார்வைக்குப் போய் விடும். இதனால் கூகிள் தேடலில் நமது தளமும் முன்னிலைப்படும். வலைத்தளத்தின் தரமும் உயரும்.

கூகிள் +1 பட்டனை வலைப்பூவில் இணைப்பது எப்படி?

1.இந்த பட்டனை நமது வலைப்பூவில் சேர்க்க கீழுள்ள இணையதளத்திற்குச் சென்று உங்களுக்குப் பிடித்த டிசைனைத் தேர்வு செய்யவும்.
http://www.google.com/webmasters/+1/button/

2.Blogger Design -> Edit Html சென்று Expand Widget Templates என்பதைக் கிளிக் செய்யவும்.

3.இதில் இரண்டு வகையான நிரல் வரிகள் உள்ளன. முதலில் Script என்று ஆரம்பிக்கும் வரியை <head> என்ற வரிக்கு அடுத்து காப்பி செய்து இடவும்.

4. பட்டனுக்கான கோடிங் <g:plusone size="tall"></g:plusone> இந்த மாதிரி இருக்கும். பதிவுகளின் மேல்பகுதியில் பட்டன் வேண்டுமெனில் <data:post.body/> வரிக்கு முன்பாகவும், பதிவுகளின் அடியில் வேண்டுமெனில் <data:post.body/> வரிக்கு பின்பாகவும் காப்பி செய்த வரிகளை இட்டு சேமிக்கவும்.

5. சிலர் இண்ட்லி ஒட்டுப்பட்டை சேர்த்திருப்பார்கள். அவர்கள் இண்ட்லி பட்டனுக்கான கோடிங்கை அடுத்து இந்த வரியைச் சேர்த்துக் கொண்டால் அழகாக இருக்கும்.

6. பதிவுகள் இருக்கும் பக்கத்தில் மட்டும் வேண்டுமெனில் plusone வரிக்கு மேலும் கீழும் கீழ்க்கண்டவாறு மாற்றிக்கொள்ளவும்.

<b:if cond="data:blog.pageType == &quot;item&quot;">
<g:plusone size="tall"></g:plusone>
</b:if>

வலைப்பூவில் பயன்படுத்துவது எப்படி ?

இந்த பட்டனைக் கிளிக் செய்வதற்கு கூகிள் கணக்கில் நுழைந்திருந்தாலே போதுமானது. நாம் என்னென்ன பதிவுகளுக்கு +1 அல்லது ஓட்டுப் போட்டிருக்கிறோம் என்பதை Google Profiles இல் சென்று +1 என்ற மெனுவில் பார்த்துக் கொள்ள முடியும். நாம் ஓட்டுப்போட்டதை பிறர் பார்க்கக் கூடாது என்றால் Edit Profile சென்று Show this tab on my profile என்பதில் மாற்றிக் கொள்ளுங்கள்.
தேவையில்லாத ஆபாச தளங்களுக்கு மார்க் போட்டு வீணடிக்காதீர்கள். குறிப்பிட்ட பதிவு உண்மையிலேயே நன்றாக இருந்தால் மட்டுமெ ஒட்டுப் போட்டு வலைப்பதிவுகளை முன்னேற்றுங்கள்.

கூகிள் தேடலில் எப்படி பயன்படுத்துவது?

இந்த வசதி தற்பொழுது கூகிள்.காம் தளத்தில் ஆங்கில மொழித் தேடலில் மட்டுமே செயல்படுகிறது. இதற்கு Google.com இல் சென்று உங்கள் கூகிள் கணக்கில் நுழைந்து கொள்ளவும். நீங்கள் எதையாவது தேடும் போது முடிவுகளின் வலப்புறத்தில் +1 பட்டனைப் பார்க்கலாம். இதிலும் நீங்கள் ஒட்டுப் போடலாம். பின்னர் பிடிக்காவிட்டால் அதையே கிளிக் செய்தால் உங்கள் ஓட்டு மைனஸ் செய்யப்படும்.


மேலும் கூகிள் தேடலில் தேடும் போது குறிப்பிட்ட பதிவிற்கு எத்தனை ஓட்டுகள் விழுந்துள்ளன என்பதும் யார் யார் ஓட்டுப் போட்டுள்ளார்கள் என்பதையும் அருகிலேயே பார்த்துக் கொள்ள முடியும்.

மேலும் இந்த சேவை கூகிளின் யூடியுப், ஆண்டிராய்டு மார்க்கெட், யூடியுப் மற்றும் Product Search ஆகிய தளங்களிலும் செயல்படும். மொபைல் மூலம் கூகிளில் தேடும் போது இந்த வசதி கிடைக்காது. ஆனால் குறிப்பிட்ட வலைப்பூவை மொபைல் மூலம் பார்க்கும் போது அதில் பட்டன் இருந்தால் பயன்படுத்தமுடியும்.

பிளாக்கரில் சேர்க்க மற்றொரு முறை :

நீங்கள் பிளாக்கரில் 2006 க்குப் பிறகு அறிமுகமான Layout Template பயன்படுத்தினால் Blogger Design -> Blog posts -> Edit -> Show share buttons என்பதைக் கொடுத்தால் எளிமையாக மற்ற Share பட்டன்களுடன் இணைந்து வந்துவிடும்.

http://ponmalars.blogspot.com/2011/06/how-to-add-google-plusone-button-in.html