வலைப்பதிவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ளவேண்டிய விஷயங்களில் முக்கியமானது Search Engine Optimization. அதாவது நம்முடைய தளங்களை கூகிள், யாஹூ, பிங்
போன்ற எண்ணற்ற தேடுபொறி இயந்திரங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பது. இதன்
முதல் படியாக நாம்
நம்முடைய தளத்தின் (உலவியின் மேல்புறத்தில் வரும்)
தலைப்பை, மாற்றி அமைக்க வேண்டும்.
(படத்தை பெரிதாக காண, படத்தின் மேல் க்ளிக் செய்யவும்)
நம்முடைய ப்ளாக்கின்
தலைப்பு முதலிலும், பதிவின் தலைப்பு இரண்டாவதுமாக வரும். அப்படி இருந்தால்
தேடுபொறி மூலம் வாசகர்கள் வரும் வாய்ப்பு குறைந்துவிடும்.
அதனால் முதலில் பதிவின் தலைப்பும் பிறகு ப்ளாக்கின் தலைப்பும் வருமாறு மாற்றி அமைக்க வேண்டும். உதாரணமாக பின்வரும் படத்தைக் காணவும்:
அப்படி மாற்றி அமைக்க,
முதலில் Blogger Dashboard=>Design=>Edit Html செல்லவும்.
Download Full Template
என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம்
டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும்
அதை Upload செய்து கொள்ளலாம்.
பிறகு
என்ற Code-ஐ தேடவும்.
<data:blog.pagetitle/>
அதை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக
<data:blog.title/>
<data:blog.pageName/> | <data:blog.title/>
என்ற Code-ஐ paste செய்யவும்.
அவ்வளவுதான்...
http://bloggernanban.blogspot.com/2010/09/blog-post.html