Saturday, July 16, 2011

பிளாக்கருக்கு தேவையான Random Posts Widget




random dice ப்ளாக்கர் படம்
நம்முடைய வலைப்பதிவுகளில் Blog Archieves, Recent Posts போன்ற widget (or Gadget)களை வைத்திருப்போம். ஆனால் அவற்றில் சமீபத்தில் நாம் பதிவிட்ட பதிவுகள் தான் தெரியும். பழைய பதிவுகள் தெரியாது. பழைய பதிவுகளை படிக்க வேண்டுமானால் Blog Archieves widget-ல் அதற்குரிய மாதம், வாரம் போன்றவற்றை க்ளிக் செய்தால் தான் படிக்க முடியும். 

ஆனால் அதிகம் பேர் அவற்றை க்ளிக் செய்வதில்லை. முகப்பு பக்கத்தில் தெரியும் பதிவுகளை மட்டும், அதுவும் தலைப்பு பிடித்திருந்தால் தான் க்ளிக் செய்வார்கள்.
இதனால் பழைய பதிவுகளில் நாம் பதிவிட்ட முக்கிய பதிவுகள் படிக்கப்படாமல் போகலாம். இதனை நிவர்த்தி செய்வதற்கான Widget தான் Random Posts Widget.

நம்முடைய ப்ளாக் ஒவ்வொரு முறை Refresh செய்யப்படும் போதும் பதிவுகளின் தலைப்பு மாறிக் கொண்டே இருக்கும். அடுத்து எந்தெந்த பதிவுகள் வரும் என்று நம்மாலேயே கணிக்க முடியாது. இதனால் நம்முடைய பழைய பதிவுகளும் அதிகம் படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

முதலில் Blogger Dashboard => Design => Add Gadget => Html/Javascript செல்லவும்.

பிறகு பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.






சிவப்பு நிறத்தில் உள்ளதில் எத்தனை பதிவுகள் தெரியவேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களோ, அந்த எண்ணை போடவும்.

பிறகு Save பட்டனை க்ளிக் செய்யவும். 

அவ்வளவு  தான்.. இதில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்..

மறக்காமல் உங்கள் கருத்துக்களையும், ஓட்டுக்களையும் பதிவு செய்யுங்கள்..
http://bloggernanban.blogspot.com/2010/09/random-posts-widget.html