Sunday, July 17, 2011

வலைப்பூவை பத்திரமாக சேமிப்பதும் மீட்பதும் எப்படி?


இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் திரு.சூர்யக்கண்ணனின் கூகிள் கணக்கை களவாடியவர் வலைப்பூவை அழித்து விட்டனர். அவருடைய பாஸ்வோர்டை மாற்றி விட்டனர்.இதனால் அவரது அனைத்து கூகிள் சேவைகளும் முடக்கப்பட்டன. எதிலும் உட்செல்ல முடியவில்லை. ஆனால் அவர் எடுத்துவைத்திருந்த பேக்கப் அவருக்கு உதவியது.
இதனால் அவர் sooryakannan.blogspot.com இல் தற்காலிகமாக முகவரியை மாற்றி தான் சேமித்து வைத்திருந்த பதிவுகளை மீட்டு பதிவிட்டுள்ளார். அவர் மீண்டும் தளராமல் தொழில்நுட்பம் பற்றி எழுதுவதற்கு புத்துணர்ச்சி கொடுப்போம்.

வலைப்பூ வைத்திருக்கும் நண்பர்கள் பலர் தங்களின் வலைப்பூவில் எழுதுவதோடு விட்டு விடுகின்றனர். தங்கள் வலைப்பூவிற்கு காப்பு நகல் ( Backup) எடுப்பதில்லை. பொழுது போக்காய் எழுதும் பலரும் எடுப்பதில்லை. பின்னால் எதாவது பிரச்சினை என்று வரும் போது கை கொடுக்க எதுவுமில்லை. சில நேரங்களில் கூகிள் நிறுவனமே உங்கள் வலைப்பூவை முடக்கி விடலாம். இது இலவச சேவை தான். ஆனால் அவர்கள் தானே முதலாளி.அதனால் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்.

அல்லது மேலே குறிப்பிட்ட மாதிரி உங்கள் கணக்குகள் திருடப்படலாம். கயவர்கள் உங்கள் கணக்கை திருடி உங்களின் அதனை இணைய சொத்துகளை ஒரு நிமிடங்களில் அழித்து விடலாம்; முடக்கி விடலாம். எனவே வலைப்பூ வைத்திருக்கும் அத்தனை நண்பர்களும் உங்களின் பாஸ்வோர்டை அடிக்கடி மாற்றி விடுங்கள். உங்களின் ரகசியச்சொல் பற்றிய கேள்விக்கு வித்தியாசமான பதில் கொடுங்கள். ( Sequrity question ). வெளியிடங்களில் அல்லது அலுவலகங்களில் இணையத்தை பயன்படுத்தினால் முறையாக வெளியேறுங்கள் (Sign out or logout ).

சரி விசயத்திற்கு வருவோம். உங்களின் வலைப்பூவை பத்திரமாக பாதுகாக்க முதலில் உங்கள் பிளாகின் template code ஐ சேமிக்க வேண்டும். இதற்கு பிளாக்கரில் நுழைந்து Design -> Edit Html சென்று Download full Template ஐ கிளிக் செய்து தரவிறக்கவும். இதில் உங்களின் template, அதில் உள்ள விட்ஜெட்கள், மற்ற விளம்பர நிரல்கள் போன்றவையும் அடங்கும்.


பின்னர் உங்கள் கணக்கு திருடப்பட்டு முடக்கப்பட்டால் நீங்கள் வேறு ஏதேனும் பயனர் பெயரை உருவாக்கி பிளாகில் சென்று அதே பக்கத்தில் உள்ள Restore template பகுதியில் இந்த xml கோப்பையே தேர்வு செய்து upload கொடுத்தால் உங்களின் பழைய template மற்றும் அதிலிருந்த விட்ஜெட்கள் போன்றவை வந்து விடும். அதாவது பழைய டெம்ப்ளேட் வேண்டும் என்றல் மட்டும். இல்லையெனில் நீங்கள் புதியதாக எதாவது ஒன்றை மாற்றிக்கொள்ள முடியும்.

அடுத்தது நமது வலைப்பூவில் உள்ள கட்டுரைகளை சேமிக்க வேண்டும். அதற்கு BloggerBackup என்ற மென்பொருளை பயன்படுத்தலாம். இதை கீழ் உள்ள முகவரியில் தரவிறக்கி நிறுவிக்கொள்ளவும்.
http://bloggerbackup.codeplex.com/


மென்பொருளைத் திறந்தவுடன் இடது பக்கத்தில் Available blogs என்ற கட்டத்தில் Add/Remove/Update blogs என்பதை தேர்வு செய்யவும். உடனே ஒரு விண்டோ வரும். அதில் உங்கள் கூகிள் பயனர் பெயர், பாஸ்வோர்ட் கொடுத்தவுடன் உங்களின் அனைத்து வலைப்பூக்களும் காட்டப்படும். தேவையான வலைப்பூவை தேர்வு செய்தவுடன் கீழ்க்கண்டவாறு இருக்குமாறு அமைக்கவும்.


சேமிக்க வேண்டிய போல்டர், கருத்துரைகள் வேண்டுமெனில் டிக் செய்யவும், ஒவ்வொரு கட்டுரையாக அல்லது ஒரே பக்கமாக சேமித்தல் இவையெல்லாம் அமைத்துவிட்டு Backup posts என்பதை கிளிக் செய்யவும். சில நிமிடத்தில் நீங்கள் தேர்வு செய்த இடத்தில் அனைத்து கட்டுரைகளும் சேமிக்கப்படும்.

பின்னர் பிரச்சனையின் போது வலைப்பூவை மீட்க வேண்டுமெனில் template ஐ தேர்வு செய்து விட்டு இந்த மென்பொருளில் உள்ள Restore Posts என்பதைகிளிக் செய்தால் போதும்.நன்றி!
http://ponmalars.blogspot.com/2010/07/how-to-backup-and-restore-blogs-in.html