Sunday, July 17, 2011

வலைப்பூவில் கூகிள்+ புரோபைல் பட்டனை இணைப்பது எப்படி? (Google+ Profile Button)


கூகிளின் புதிய சமூக வலைத்தள சேவையான கூகிள் பிளஸ் சென்ற வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. கூகிள் இந்த சேவையை மேலும் மெருகேற்றி வரும் நேரத்தில் இணையதளம் மற்றும் வலைப்பூ வைத்திருப்பவர்கள் இதனைப் பயன்படுத்தி இணையவரத்தையும் வலைத்தளத்தின் மதிப்பையும் உயர்த்துவது முக்கியமான ஒன்றாகும்
. இதற்கு முன்னர் வெளியான கூகிள் +1 பட்டனை வலைத்தளத்தில் இணைத்திருப்பீர்கள். இதில் ஒட்டுப்போட்டால் கூகிளின் பார்வையில் நமது வலைத்தளத்தின் மதிப்பும் உயரும்.இப்போது வந்திருக்கும் கூகிள்+ சமூக வலைத்தள சேவையில் நமது நண்பர்களாக பலரைச் சேர்ப்பதன் மூலம் நமக்கு நிறைய ஓட்டுகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதல்லவா?

வலைத்தளத்தில் நமது டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சேவைகளுக்கு இணைப்பு கொடுத்திருப்போம். இதைப் போல கூகிள்+ சமுகவலைத்தளத்தில் நமது புரோபைல் பக்கத்திற்கான இணைப்பையும் கொடுத்தால் நமது வலைப்பூவிற்கு வரும் ஏராளமான வாசகர்கள் கூகிள்+ பக்கத்தில் நண்பர்களாக சேருவார்கள். இதனால் நமது பதிவுகள் அதிகம் சென்றடையும். மேலும் கூகிள்+ பட்டன் மூலமாக அதிக ஓட்டுகளும் விழும்.


Google+ Profile Button எப்படிச் சேர்ப்பது?

1. முதலில் உங்கள் கூகிள்+ புரோபைல் இணைய முகவரி தெரிய வேண்டும். இதற்கு கீழுள்ள சுட்டியில் உங்கள் கூகிள் கணக்கில் நுழையவும். https://plus.google.com/me

2. இதில் கூகிள்+ கணக்கின் புரோபைல் காட்டப்படும். வலை உலவியின் அட்ரஸ் பாரில் உள்ள இணையமுகவரியை காப்பி செய்யவும். எடுத்துக்காட்டாக எனது கூகிள்+ புரோபைல் முகவரி : https://plus.google.com/107825122579806036867


3. பின்னர் உங்கள் தளத்திற்கான பட்டனைப் பெறுவதற்கு கீழ்க்கண்ட சுட்டியைக் கிளிக் செய்யவும். http://www.google.com/webmasters/profilebutton/

4. இதில் Enter Profile URL என்ற பெட்டியில் காப்பி செய்த உங்கள் புரோபைல் முகவரியை இடவும். அடுத்து உங்களுக்கு விருப்பமான பட்டன் அளவினைத் தேர்ந்தெடுத்து விட்டு அதன் கீழே இருக்கும் நிரல் வரிகளை காப்பி செய்து கொள்ளவும்.


5. இதனை பிளாக்கர் விட்ஜெட் ஆக உங்களுக்குப் பிடித்த இடத்தில் சேர்க்கலாம். தேவைப்படின் Edit Html இல் சென்று பதிவின் கீழே வருமாறும் சேர்க்கலாம். ஆனால் இதனை மற்ற ஓட்டுப்பட்டைகளுக்கு அருகில் வைக்காமல் வேறு இடத்தில் வைப்பது சிறந்தது. எனது கூகிள்+ பக்கம்

http://ponmalars.blogspot.com/2011/07/google-profile-button.html