தங்களின் பதிவுகள் திருட படுவதில் இருந்து தடுக்க வேண்டுமா! நண்பர்களே |
செய்தி: மச்சி யாருமே பிறக்கும் போதே, அறிவாளி இல்ல மாமு, மற்றவர்கள் மூலமே நாம் ஓர் தகவலை பெறுகிறோம், கற்கிறோம். நான் இடும் பதிவுகளும் மற்றவர் ஒருவரால் கற்றாதே. ஆனால் நான் அதை எனக்குரிய பாணியில் அனைத்தும் எனது செயலாகவே பதிவிடுகிறேன். நண்பர்களே தயதுசெய்து மற்றவர்களின் பதிவுகளை திருட வேண்டாம். அதில் முழு பயன்யில்லை தங்களின் முழு திறமையால் தாங்களே ஓர் தகவலை தயார்ப்படுத்துங்கள். அதிகமாக இந்த செயலை புதியதாக பதிவு எழுதுபவர்களே மேற்கொள்கின்றனர். அவர்களின் எண்ணம் நாம் சீக்கிராமாக சிறப்படைய வேண்டும் என்பதே. எனது சில பதிவுகள் கூட அப்படியே சிறிதும் மாற்றம் செய்யபடமால் அப்படியே சில வலை பூக்களில் கண்டேன். முதலில் கோபம் வந்தது, பின்னர் சிரிப்பு தான் வந்துச்சு, ஏன்னா சிறிது கூட மாற்றம் செய்யமா! அப்படியே பதியப்பட்டுயிருந்தது. நானும் எதோ சரி போன போதுனூ விட்டுடேன். ஏன அது புதியதாக தொடங்கப்பட்ட வலைப்பூ.
1. தங்களது திருடப்பட்ட பதிவுகள் எங்கு உள்ளன என்று அறிய
தங்களின் பதிவுகள் திருடப்பட்டு எங்கு உள்ளது என அறிய வேண்டும் அல்லவா! ஏனெனில் அப்போது தான் தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஹிட்ஸ் நமக்கே தெரியும். சில தளங்கள் தங்களின் திருடப்பட்ட பதிவுகள் எங்கு உள்ளன என அறிய பயன்படுகின்றன.
இது பதிவர்களின் சிறப்பு நண்பனாக செயல்படுகிறது. இந்த தளத்திற்கு சென்று தங்களின் பதிவின் முகவரியை அளித்தால். அல்லது அதன் தலைப்பை இட்டால் தங்களின் பதிவுகள் எங்கு எங்கு உள்ளன, என தெரிவுப்படுத்துகிறது. மேலும் தங்களின் பதிவு சம்பந்த பட்ட செய்திகள் எங்கு உள்ளன எனவும் காட்டுகிறது.
ஆஹா, ஆஹா கூகுள் எத்தனை அருமையான சேவைகளை வழங்குகிறது. இந்த சேவை மிகவும் பயன்யுள்ள சேவை. இந்த சேவையை பயன்படுத்த முதலில் இந்த தளத்திற்கு செல்லுங்கள். பின்னர் என்பதில் தங்களின் பதிவின் தலைப்பு அல்லது முகவரியை அளித்து மேலும் தங்களின் இமெயில் முகவரியையும் அளித்து என்பதை கிளிக் செய்யுங்கள். இனி இதன் பணியை தொடங்குவிடும். என்னவென்றால் இனி இணையத்தில் தங்களின் பதிவுகள் அல்லது முகவரி வேறு எங்குயெனும் பதியப்பட்டு இருந்தால் தங்களுக்கு உடனடியாக அந்த தளத்தின் முகவரி, மெயிலில் அனுப்பிவைக்கப்படும்.
மீண்டும் கூகுளே தான், அடுத்த சேவை, கூகுள் வெப் மாஸ்டர் டூல்ஸ்யில் நுழைந்து தங்கள் பிளாக்கை தேர்வு செய்யுங்கள். பின்னர் வலதுகை ஓரத்தில் Your Site on Web என்பதை கிளிக் செய்யவும். பின்னர் அதில் Links To Your Site என்பதை கிளிக் செய்தால் தங்களின் பதிவுகள் லிங்கோடு எங்கு எங்குலாம் கலந்துள்ளன என காட்டும்.
CLICK THE IMAGE VIEW EN-LARGE
WaterMarking
தங்களின் பதிவுகளில் இடும் புகைபடங்களுக்கு முக்கியத்துவம் தாருங்கள். வாட்டர் மார்க் என்பது தாங்கள் பதிவும் புகைபடங்கள் மீது தங்களின் பிளாக் அல்லது தளத்தின் முகவரியை இடவும். இதனால் இவை திருடப்படுவது தடுக்கப்படலாம். மேலும் வாசகர்கள் சிலரும் கிடைக்கலாம். இதற்கான சில மென்பொருட்கள் உள்ளன். ஆனால் அதை பயன்படுத்த நேரம் செலவழிக்க வேண்டும் அதிகம். நீங்கள் கூகுள் குரோம் பயன்படுத்துவார இருந்தால் சில ஆடோன்கள் உள்ளன் அவற்றை கொண்டு இந்த செயலை மேற்கொள்ளலாம். பயர்பாக்ஸிற்கு கூட உள்ளது.
தங்களின் கருத்துகளை தெரிவுப்படுத்தவும். பிளிஸ் நண்பா! விளம்பரங்களை கிளிக் செய்து எனக்கு உதவுங்கள்.
இந்த பதிவு தொடரும்..........இன்னும் பல தகவல்கள் உள்ளன. அடுத்த பதிவில் தெரிவிக்கப்படும்.
http://tipsblogtricks.blogspot.com/2011/05/blog-post.html
http://tipsblogtricks.blogspot.com/2011/05/blog-post.html