Sunday, July 17, 2011

PHP இல் பயனாளரின் விவரத்தை (User Info ) எளிதாக சேமிப்பது எப்படி?

MySql தரவுத்தளம் பயன்படுத்தினால் கீழ்க்க்ண்ட அட்டவணையை உருவாக்கவும்.இதன் மூலம் பயனரின் வலை உலவி, தேதி நேரம்,முகவரி,எங்கிருந்து வருகிறார்கள் (Referrer)போன்ற விவரங்களை சேமிக்க முடியும்.



CREATE TABLE statinfo (
browser text NOT NULL,
date text NOT NULL,
host text NOT NULL,
referer text NOT NULL
);


கீழ் உள்ள நிரலை userinfo.php என சேமித்து உங்கள் உலவியில் இயக்கவும்.இந்த நிரலில் உங்களுடைய பயனர் பெயர், கடவுச்சொல், தரவுத்தள பெயர் போன்றவற்றை மாற்றிக்கொள்ளவும்.



$connection = mysql_connect("localhost","login_name","password") or die ("Unable to connect to MySQL server.");

$db = mysql_select_db(YOUR_DATABASE_NAME) or die ("Unable to select requested database");

$browser = $HTTP_USER_AGENT;

$date = date("F jS Y, h:iA");

if ($REMOTE_HOST == "") {$host = $REMOTE_ADDR;}

else {$host = $REMOTE_HOST;}

if( empty( $HTTP_REFERER ) or '' == $HTTP_REFERER ) {$HTTP_REFERER = 'No Referer';}

mysql_query ("INSERT INTO statinfo (browser, date, host, referer) VALUES ('$browser','$date','$host','$HTTP_REFERER' )");

mysql_close($connection);

?>


$HTTP_USER_AGENT என்பது வலை உலவியின் விவரம் அறியவும்,
$REMOTE_ADDR என்பது பயனரின் வலைத்தள முகவரி எண் அறியவும்,
$REMOTE_HOST என்பது பயனரின் வலைத்தள முகவரி அறியவும்,
$HTTP_REFERER என்பது பயனர் எங்கிருந்து வருகிறார்கள் என அறியவும் பயன்படுகின்றன.
http://ponmalars.blogspot.com/2010/03/php-user-info.html