Sunday, July 17, 2011

பிளாக்கின் வாசகர்களை வரும் காலத்தில் இழக்காமல் இருக்கு-FeedBurner


*****தங்கள் பிளாக்கிற்கு வரும் வாசகர்களை வரும் காலத்தில் இழக்காமல் இருக்க..என்ன செய்ய போறிங்க...ம்ம் யோசிங்க..ஓகே! விடுங்க....







*****அறம்பகாலத்தில் தங்கள் பிளாக்கில் அருமையான தகவல்களை தந்து, வாசகர்கள் எண்ணிக்கை அள்ளியிருப்பிங்க, ஆனால் நாளடைவில் சிறிய இடையுறால் சரியாக தங்கள் பிளாக் தொடர தங்களால் முடியவில்லை, ஆனால் சிறிது நாட்களின் மீண்டும் தங்கள் பிளாக்கின் சேவையை தொடர ஆசைப்படுறிங்க....அப்போதும் அதே வாசகர்கள் தங்கள் பிளாக்கிற்கு வருகை தருவார்களா! என்றால் அது நடக்காத ஒரு மேட்டரூ.....அட! இதற்கு என்ன தான் வழி என யோசிகிறிங்களா!....இது சப்ப மேட்டருங்க...தங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் அனைவரும் தங்கள் எழுதும் ஓவ்வொரு பதிவை பற்றியும் செய்தி தானகவே அனுப்பிவைக்கப்பட்டாள், எப்படி இருக்கும்...கொய்யால! சும்மா பேஜாரா இருக்கும்னூ சொல்கிறிர்களா!...ம்ம்ம்



*****இந்த அருமையான சேவையை சில நிறுவனங்கள் வழங்குகின்றன. அவற்றுள் சிறந்தது தான் நாம் காண இருக்கும் FeedBurnerன் சேவை. இது தான் உலக அளவில் பெரும்பலான மக்களால் பயன்படுத்தப்படுகிறது..மேலும் இதன் சிறப்பு இது தற்போது இருப்பது, இணைய உலகின் ஜாம்பவனான கூகுள்யிடம் தான்...

இதை தங்கள் பிளாக் அல்லது வலையில் அமைப்பதன் மூலம் தங்கள் பழைய வாசகர்களின் வருகையை எப்போதும் பெறலாம்...

*FeedBurnerயின் இ-மெயில் சேவையை பெருவது, எப்படி..முதலில் 
JOIN FEEDBURNER NOW இந்த வலைதளத்திற்கு செல்லுங்கள்.


*தற்போது மேலே உள்ள படத்தில் உள்ளதை போன்று, ஓர் பெட்டி தங்களுக்கு தோன்றும், அதில் தங்கள் வலைதளத்தின் அல்லது பிளாக்கின் முகவரியை அளிக்கவும்....பின்னர் NEXT என்பதை கிளிக் செய்யவும்.


*மேலே உள்ளதை போன்று தோன்றும் திரையில் இரண்டில் எந்த முறை வேண்டுமோ, அதை தாங்கள் தேர்ந்தேடுங்கள். பின்னர் NEXT என்பதை கிளிக் செய்யவும்.


*தற்போது தோன்றும் திரையில் இரண்டு முக்கியமான, வேலை உள்ளது. முதலில் இருக்கும் FEED TTILE என்பதில் தாங்கள் என்ன பெயர் தர எண்ணுகிறிர்களோ அதை தரவும். பெரும்பாலும் அனைவரும் தங்கள் பிளாக்கின் பெயரை தான் அமைப்பார்கள். அடுத்தது FEED ADDRESS
என்பதில தங்கள் ஓடைகான (FEED) முகவரிரை அமைக்கவும்..இதுவும் பெரும்பாலும் அனைவரும் தங்கள் பிளாக்கின் முகவரியை அல்லது பெயரையே தான் அமைப்பார்கள். பின்னர் NEXT என்பதை கிளிக் செய்யவும்.



*தங்களுக்கு இப்போது ஓர் வாழ்த்து செய்தி கிடையும்.  NEXT என்பதை கிளிக் செய்யவும். மீண்டும்  NEXT என்பதை கிளிக் செய்யவும்.தற்போது தங்களுக்கான செய்தி ஓடை அதாவது FeedBurner அக்கொண்ட் செயல்ப்படுத்தபட்டாச்சு...





*இது தான் மிக முக்கியம்...தற்போது தாங்கள்....PUBLICIZE என்பதை கிளிக் செய்யவும். அதில் Email Subscriptions என்பதை கிளிக் செய்யவும்.





*பின்னர் தோன்றும் திரையில் ACTIVE என்பதை கிளிக் செய்யவும். தற்போது தங்களுக்கான , தங்களை பதிவை, வாசகர்களிடம் சேர்க்கும் விட்கேட்கான கோட்டிங் தோன்றும்...





*இங்கு USE THIS WIDGET IN என்னும் ஓர் வாசகம் இருக்கும். அதில் தாங்கள் பிளாக் என்றால் Blogger தேர்வு செய்து, பின்னர் Go என தரவும்...தற்போது தங்களை பதிவை, வாசகர்களிடம் சேர்க்கும் விட்கேட், தங்கள் பிளாக்கில் இணைக்கப்பட்டுவிட்டது..



*இனி தங்கள் பதிவுகள் பிடித்துயிருந்தால் தங்கள் வாசகர்கள், தங்கள் மெயில் முகவரி மூலம் இதில் இணைந்தால் போதும், இனி தங்களின் ஒவ்வொரு பதிவும் அவர்களை போய் சேரும்..



.

http://tipsblogtricks.blogspot.com/2011/01/feedburner.html