தங்களின்
பிளாக்கில் இடும் புதிய பதிவுகளை தாங்கள் சமூக வலைதளங்கள் மற்றும் மக்கள்
இருக்கும் இடங்களில் தங்களின் பிளாக் மற்றும் பதிவுகளை
தெரிவுபடுத்துவீர்கள்.
தங்களின்
ஒவ்வொரு பதிவின் முடிவிலும் தங்களின் பதிவுகளை சமூக வலைதளங்களான பேஸ்புக்
மற்றும் டிவிட்டரில் பதிய மறக்க மாட்டீர்கள். அறம்பத்தில் இதனை தாங்கள்
தவறாமல் மேற்கொண்டாலும், சிறிது நாட்களின் தங்களுக்கு போதிய நேரம்யின்மை
காரணத்தால், இந்த செயலை மேற்கொள்ள தவறியிருப்பிர்கள். இந்த குறையை போக்க
தான், இந்த அருமையான பதிவு.
தங்களின்
பிளாக்கில் பதிவுகளை இட்ட அடுத்த நிமிடமே தங்களின் பதிவுகள் முதன்மை சமூக
வலைதளங்களான பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் தானாக பிரசுரம் ஆனால் ஏப்படி
இருக்கும். இந்த அருமையான சேவையை Twitter Feed என்னும் வலைதளம் வழங்குகிறது.
முதலில்
மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லுங்கள். பின்னர்
அங்கு தங்களின் இமெயில் முகவரியை தந்து தங்களை அங்கு உறுபினராக ஆக்கி
கொள்ளுங்கள்.
பின்னர், தோன்றும் திரையில் CREATE A FEED என்பதனை கிளிக் செய்யவும்.
FEED NAME என்பதில் தங்களின் பிளாக் பெயரையும் BLOG URL என்பதில்
தங்களின் பிளாக் முகவரியை இடவும். பின்னர் அடுத்த ஸ்டெப்பிற்கு செல்லவும்.
அதில் எந்த சமூக தளத்தில் தங்களின் பதிவுகளை பிரசுரம் ஆகா வேண்டும் என
தேர்வு செய்யவும். அவ்வளவு தான் இனி தங்களின் பிளாக்கின் பதிவுகள் தானாக
பிரசுரம் ஆகும் டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில்.
http://tipsblogtricks.blogspot.com/2011/06/blog-post.html