நமது வலைப்பக்கத்தில் ஏராளமான இணைப்புகள் ( Links ) இருக்கும். நமது நண்பர்களின் பக்கங்களுக்கு அல்லது தளத்திற்கு நமது பதிவில் இருந்து இணைப்பு கொடுத்திருப்போம். மேலும் சைட்பாரில் நமக்குப்பிடித்த வலைத்தளங்களுக்கு இணைப்பு கொடுத்திருப்போம். மேலும் நமது பக்கத்தில் விளம்பரங்களும் பட இணைப்புகளும் கொடுத்திருப்போம். இவைகளை கிளிக் செய்தால் நமது வலைப்பக்கத்தை மறைத்துவிட்டு திறக்கப்படும். சிலருக்கு எரிச்சல் கொடுக்கும். கூடவே நமது பக்கத்தை விட்டு படிப்பவர்களின் கவனம் போய்விடும். இவை இன்னொரு டேபில் அல்லது புதிய விண்டோவில் தோன்றினால் சிறப்பாக இருக்கும்
செயல்படுத்துவது எப்படி?
முறை 1:
பதிவுகள் எழுதும் போது எதாவது ஒரு வலைப்பக்கத்திற்கு இணைப்பு தர வேண்டுமானால் சங்கிலி போன்றுள்ள பட்டனை கிளிக் செய்து தருவோம்.அதை புதிய டேபில் தோன்றச்செய்ய Edit Html சென்று அந்தப்பகுதியை பார்க்க வேண்டும். அதில் target=”_blank” என்பதை சேர்க்க வேண்டும். இது தான் புதிய விண்டோவில் தோன்ற வேண்டும் என்பதற்கான HTML பண்பாகும்.
<a href="http://ponmalars.blogspot.com/">ponmalar</a>
<a href="http://ponmalars.blogspot.com/" target="_blank">ponmalar</a>
ஆனால் இது நமக்கு சரிப்பட்டு வராது. ஒவ்வொரு முறையும் இதை கோடிங் சென்று திருத்துவது நேரம் பிடிக்கும் வேலையாகும்.
முறை 2:
இந்த முறையில் நமது வலைப்பக்கத்தில் உள்ள எந்த இணைப்பையும் இன்னொரு டேபில் அல்லது பக்கத்தில் தோன்றச்செய்யலாம். இதை பிளாக்கர் Settings -> Edit Html சென்று <head> வரிகளுக்குப்பின் சேர்க்கவும்.
<base target="_blank"/>
ஆனால் இதில் ஒரு குறை உள்ளது. அனைத்து இணைப்புகளோடு நமது வலைப்பக்க இணைப்புகளும் வேறு விண்டோவில் தோன்றும் போது எரிச்சலூட்டும். ஒரு பதிவை முடித்துவிட்டு அடுத்த பதிவை கிளிக் செய்தால் அது வேறு டேபிற்கு சென்றுவிடும்.
முறை 3:
எனவே நமது வலைப்பக்கத்தில் உள்ள பிறரின் இணைப்புகள் மட்டும் இன்னொரு டேபில் தோன்றவேண்டும். இதுதான் சரியான வலைப்பக்க வடிவமைப்பு முறை.
இது JQuery எனும் ஜாவாஸ்கிரிப்டில் எழுதப்பட்டது. இதை சேர்க்க உங்கள் பிளாக்கர் Settings -> Edit Html சென்று என்ற </b:skin> டேக் வரிக்கு முன் சேர்த்துவிடவும்.
<script type="text/javascript" src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.3.2/jquery.min.js"></script>
<script type="text/javascript"><br />//<![CDATA[ jQuery('a').each(function() { // Let's make external links open in a new window. var href = jQuery(this).attr('href'); if (typeof href != 'undefined' && href != "" && (href.indexOf('http://') != -1 || href.indexOf('https://') != -1) && href.indexOf(window.location.hostname) == -1) { jQuery(this).attr("target", "_blank"); } }); //]]><br /></script>
இப்போது உங்கள் வலைப்பக்க இணைப்புகள் சரியான முறையில்
வடிவமைக்கப்பட்டிருக்கும். நன்றி.
http://ponmalars.blogspot.com/2010/11/open-link-in-new-window-in-blogger.html
|