இணையத்தை விட மொபைல்களின் வளர்ச்சி அதிகமான எண்ணிக்கையில் போய்க் கொண்டிருக்கிறது. ஒரே கிளிக்கில் இணையம், சமூக வலைத்தளங்கள் என மொபைலிலேயே எல்லாவற்றையும் செய்து கொள்ளுமாறு ஸ்மார்ட் போன்கள் உருவாக்கப்படுகின்றன. பேருந்தில் எங்கேயாவது செல்லும் போது நானும் பல வலைப்பூக்களைப் படிப்பதுண்டு. நமது வலைப்பக்கமானது இணைய உலவிகளில் படிப்பதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது. அதனால் நமது வலைப்பூவை மொபைலில் பார்க்கும் போது தெளிவான இட அமைப்புடன் தெரிவதில்லை.
இனி மொபைல் துறையின் அபார வளர்ச்சியில் பலரும் இணையதளங்களைத் தேடி கணிணிக்குச் செல்லாமல் மொபைலிலேயே பார்த்துக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. உதாரணமாக எனது வலைப்பூவின் பக்கங்கள் மொபைலில் மட்டும் 1000 முறை படிக்கப்பட்டுள்ளன. வலைப்பூவை மொபைலிலும் பார்ப்பதற்கு ஏற்றபடி அமைப்புகளை அமைத்து விட்டால் பல பேர் பயனடைவார்கள். இதற்கு எந்த நிரல்வரிகளும் உங்கள் வலைப்பூவில் சேர்க்க வேண்டியதில்லை. பிளாக்கர் சேவையே இதை எளிமைப் படுத்தியுள்ளது. இதனை எப்படிச் செய்வது?
1.கீழ்க்கண்ட இணைப்பைக் கிளிக் செய்து பிளாக்கர் டிராப்ட் தளத்தில் உங்கள் கணக்கில் நுழையவும்.
http://draft.blogger.com
2. Settings -> Email & Mobile என்ற பகுதிக்குச் செல்லவும்.
3. பின்னர் Show Mobile Template என்பதற்கு நேராக உள்ள Yes. On mobile devices, show the mobile version of my Template என்பதைத் தேர்வு செய்து சேமித்துக் கொள்ளவும்.
4. மொபைலில் உங்கள் தளம் எவ்வாறு தெரியும் என்பதை அறிந்து கொள்ள அருகிலேயே உள்ள Mobile Preview என்ற பட்டனைக் கிளிக் செய்து பார்த்துக் கொள்ள முடியும்.
http://ponmalars.blogspot.com/2011/05/how-to-optimize-blog-for-mobile-devices.html
|