Saturday, July 16, 2011

வலைத்தளங்களில் Alexa Widget-ஐ சேர்ப்பது எப்படி?




அலெக்ஸா என்பது Amazon.com-ஆல் நடத்தப்படும் தளமாகும். இதன் வேலையே இணையத்தளங்களின் (வலைப்பதிவுகள் உட்பட) மதிப்புகளை பட்டியலிடுவதாகும். அந்த மதிப்பு Alexa Rank எனப்படும்.
 

எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

அலெக்ஸாவின் மதிப்பு, கடந்த மூன்று மாதங்களில் உங்கள் தளத்திற்கு எத்தனை பேர் வருகை தந்துள்ளார்கள் (No. of visitors)? உங்கள் தளத்தின் பக்கங்கள் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது (No. of pageviews)? உங்கள் தளத்திற்கு வருபவர்கள் எவ்வளவு நேரம் உங்கள் தளத்தில் இருக்கிறார்கள்? என்பதை வைத்து கணக்கிடப்படுகிறது. Alexa Rank-ல் குறைந்த எண்ணுக்கு அதிக மதிப்பு, பள்ளிக்கூடங்களில் நாம் வாங்கும் Rank போல..

நம் தளத்தின் தகவலை எப்படி பெறுகிறது?

Alexa ToolBar நிறுவியுள்ள உலவிகளின் மூலமாகவும், அலெக்ஸா Widget நிறுவியுள்ள தளங்களின் மூலமாகவும், இன்னும் சில தொழில்நுட்பங்களின் மூலமாகவும் நம்முடைய தளங்களின் தகவலை பெறுகிறது.
 

அலெக்ஸா widget-ஐ நம் தளங்களில் சேர்ப்பது எப்படி?
 

1. முதலில் http://www.alexa.com/siteowners/widgets தளத்திற்கு செல்லுங்கள்.


2. Alexa Site Stats Button என்ற இடத்தில் உங்கள் தள முகவரியை கொடுத்து, Build Widget என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
3. பிறகு வரும் பக்கத்தில் மூன்று விதமான widget-ம் அதற்கான Code-ம் வரும். உங்களுக்கு எந்த widget பிடித்திருக்கிறதோ அதனுடைய code-ஐ copy செய்துக் கொள்ளுங்கள்.


4. பிறகு Blogger Dashboard => Design => Page Elements செல்லுங்கள்.

5. Add a Gadget என்பதை க்ளிக் செய்து, பிறகு வரும் window-ல் HTML/JavaScript என்பதை தேர்வு செய்யவும்.

6. நீங்கள் Copy செய்து வைத்திருந்த Code-ஐ Paste செய்து, Save பட்டனை க்ளிக் செய்யவும்.
 

அவ்வளவுதான்... இனி உங்கள் தளத்தில் Alexa Rank தகவல் தெரியும்.