Sunday, July 17, 2011

உங்கள் வலைப்பக்கத்திற்கு Favicon அல்லது லோகோ சேர்ப்பது எப்படி ?

ஒவ்வொரு வலைத்தளங்களில் மேயும் போது அவற்றின் முகவரி இருக்கும்
Address bar இல் அவர்களின் சிறிய லோகோ ( Logo ) இடம் பெற்றிருக்கும். அதே போல அந்த தளத்தின் தலைப்பு இடம்பெறும் வலை உலவியின் டேப் இல் கூட அந்த லோகோ இடம் பெற்றிருக்கும். இதனைத்தான் Favicon அல்லது Logo என்று சொல்வார்கள். என்னுடைய வலைப்பக்கத்தில் கூட நீங்கள் பார்க்கலாம்.இதனை உங்கள் வலைப்பக்கத்தில் எப்படி இடம் பெறச்செய்வது எப்படி என்று பார்ப்போம்.





படிநிலை - 1

உங்களுக்கான படத்தை முதலில் தேர்வு செய்து கொள்ளுங்கள். இதில்
twitter கணக்கு வைத்திருந்தால் அந்த படத்தை கூட எளிமையாக தேர்வு செய்யலாம். பின்னர் இந்த தளத்தில் சென்று உங்கள் படத்தை ஐகானாக மற்ற வேண்டும், ஏனெனில் முகவரிப்பட்டியில் இடம் பெறவேண்டிய குறும்படம் ஐகானாக அல்லது .gif Animated கோப்பாக தான் இருக்க வேண்டும்.

http://www.html-kit.com/favicon/


இங்கே சென்றால் உங்களுடைய படத்தை ஐகானாக அல்லது .gif கோப்பாக மாற்றி தருவார்கள். இதில் உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்யலாம். இங்கேயே
படத்திற்கு பின்புற வண்ணம் சேர்த்தல், பார்டர் சேர்த்தல், கருப்பு வெள்ளை ஐகானாக மாற்றுதல் போன்றவற்றை Customize என்பதை கிளிக் செய்வதன் மூலம் செய்யலாம். பின்பு Download Icon Package என்பதை தேர்வு செய்து உங்கள் கணினியில் தரவிறக்கிகொள்ளவும்.

படிநிலை - 2

உங்களுக்கான குறும்படம் தயாரானபின் அதை நீங்கள் ஆன்லைனில் சேமித்தால் தான் அதை பயன்படுத்த முடியும். அதனால் இந்த குறும்படத்தை எதாவது ஒரு இணைய சேமிப்பகம் ( Online Storage Website ) வசதி உள்ள தளங்களில் சேமிக்கவேண்டும். Photobucket போன்ற பல இணையதளங்களில் ஐகான் ( .ico ) கோப்புகளை சேமிக்கும் வசதி இல்லை. நான் இறுதியாக Fileden என்ற தளத்தில் உறுப்பினராகி என்னுடைய ஐகானை சேமித்தேன்.
இணையதள முகவரி: http://www.fileden.com/

உங்களுக்கு தெரிந்த ImageHosting தளங்கள் இருந்தால் கருத்துரை இடவும். இந்த தளத்தில் ஏற்றிய பின்னர் அதற்க்கான இணைப்பை ( Link ) பெற்றுக்கொள்ளவும்.

Link இதைப்போல இருக்கும்.

http://www.fileden.com/files/2009/7/6/2500219/favicon.ico

படிநிலை - 3

உங்கள் blogger கணக்கில் நுழைந்து Layouts பகுதிக்கு சென்று Edit Html என்பதை
தேர்வு செய்யவும். இப்போது உங்கள் வலைப்பக்கத்தின் HTML கோடிங் பகுதியில்
சென்று Head Tag முடிவதற்கு முன்பாக கீழே உள்ள கோடிங்கை சேர்க்கவும்.
Head Tag என்பது எங்கே இருக்கிறது என்று தெரியாவிட்டால் F3 அழுத்தி தேடிக்கொள்ளுங்கள். மேலும் படத்தைப்பார்க்க விபரங்களுக்கு.

link href="http://www.fileden.com/files/2009/7/6/2500219/favicon.ico" rel="shortcut icon" type="image/x-icon"

இந்த வரிக்கு முன்பும் பின்பும் < > குறியீடுகள் சேர்த்துக்கொள்ளவும்.



மேல் உள்ள கோடிங்கில் முக்கியமான விஷயம் உங்கள் குறும்படத்திற்க்கான
Fileden இல் கிடைத்த இணைப்பை ( Link ) மாற்றி அடித்துக்கொள்ளவும். பின்னர் சேமித்து விட்டு உங்கள் வலைப்பக்கத்தை பாருங்கள்.
ஜொலிக்கிறதா என்ன ?

http://ponmalars.blogspot.com/2009/07/favicon.html