Sunday, July 17, 2011

Facebook Fan Pageயில் பிளாக்கின் பதிவுகள் தானாக பிரசுரம் ஆக வேண்டுமா!



     தங்களின் பிளாக்கின் பதிவுகள் தங்கள் பேஸ்புக்கின் Fan Pageயில் தானாகவே பிரசுரம் ஆக வேண்டுமா! நண்பர்களே ஓர் சிறந்த பதிவை வெளியிடவும், பிரசுரம் செய்வது மிக கடினமான செயல்...ஆனால் அந்த பதிவை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாம் படும்ப்பாடு இருக்கிறேதே! அய்யோ! அய்யோ அப்ப சாமி ஆள விடுங்க டா! இப்பவே கண்ண கட்டுதே! என ஒரு வழியாக்கி விடும் நம்மை.



     ஓர் பதிவு எழுதினால் நாம் என்ன செய்வோம்? முதலில் நம் பதிவுகளை பல்வேறு திரடிகளில் இணைப்போம் பின்னர் நம் நண்பர்களுக்கு தெரிவிப்போம், பின்னர் ஒவ்வொரு சமூக வலை தளங்களிலும் தங்கள் பதிவை வெளியிடவோம். இதற்க்குலாம் அதிக நேரத்தை நாம் செலவழிக்க வேண்டும். முடிந்த அளவாவது நேரத்தை சேமிக்க வேண்டும்.







     முதலில் பேஸ்புக்கில் அரம்பிக்கலாம்...நம்மில் 95% பேர் பேஸ்புக்கின் Fan Page யை வைத்துயிருப்பிர்கள்...தங்களின் ஒவ்வொரு பதிவையும் தங்களின் Fan Pageயில் பதிய வேண்டும்..இந்த நேரத்தை மிச்ச படுத்தினால் எப்படி இருக்கும். தங்களின் பேஸ்புக்கின் Fan Pageயில் பிளாக்கில் பதிவுகள் தானாக தோன்ற தங்கள் பின்வரும் செயல்முறைகளை மேற்க்கொள்ள வேண்டும்...



*01. முதலில் தாங்கள் தங்களின் பேஸ்புக் அக்கொண்டில் நுழைந்துக் கொள்ளுங்கள்.

*02. பின்னர் Facebook-Pages இந்த முகவரிக்கு செல்லவும். இங்கு தங்களின் அனைத்து Pageகளும் இருக்கும் இதில் எதேனும் ஒன்றை தேர்வு செய்யவும்.



*03. அடுத்தது தங்கள் Pageயில் Add என்பதை கிளிக் செய்யவும், உதவிக்கு மேலே உள்ள படத்தை காணவும்.



*04. Write a Note என்பதை கிளிக் செய்யவும்..



*05. பின்னர் தோன்றும் திரையில் TITLE மற்றும் BODY என்பதில் தாங்கள் ஏதேனும் ஓர் தலைப்பை அளிக்கவும்..அடுத்து Save Draft என்பதை கிளிக் செய்யவும்..கடைசியாக இதை Delete செய்துவிடலாம்..



*06.பின்னர் தங்கள் Pageயின் Left Side பாருங்கள் Edit Import Settings என இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள்.



*07. தற்போது தோன்றும் திரையில் Web Url என்பதில் தங்களின் பிளாக்கின் Rss Feed முகவரியை அளிக்கவும்...பின்னர் Start Importing என்பதை கிளிக் செய்யவும்.



*08. தற்போது தங்களுக்கு ஓர் செய்தி பெட்டி கிடைக்கும் அதில் Conform அல்லது Cancel என இருக்கும் இதில் தாங்கள் Conform என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.



*09.அவ்வளவு தான் முடிந்தது...



*10. அது சரி நண்பா..அப்படியே எனது பேஸ்புக் பேன் பேஜ்யில் தாங்கள் இணைந்துக்கொள்ளுங்களேன்.My Fan Page - Facebook


http://tipsblogtricks.blogspot.com/2011/01/facebook-fan-page.html