Saturday, July 16, 2011

எளிதாக ப்ளாக்கர் Favicon-ஐ மாற்ற..

Favourites Icon எனப்படும் Favicon-ஐ ப்ளாக்கரில் மாற்றுவது எப்படி? என்று ஏற்கனவே நாம் பார்த்தோம். தற்பொழுது அதனை எளிதாக மாற்றும் வசதியை ப்ளாக்கர் தளம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதனை இங்கு பார்ப்போம்.


ஃபேவிகானை எளிதாக மாற்ற..

1. Blogger Dashboard=>Design=>Page Elements பக்கத்திற்கு செல்லுங்கள்.

2. அங்கு Navbar என்பதற்கு மேலே இடது புறம் Favicon என்று Gadget-ஆக இருக்கும். அதில் Edit என்பதை க்ளிக் செய்து உங்கள் கணினியில் உள்ள நீங்கள் Favicon-ஆக வைக்க நினைக்கும் படத்தை தேர்வு செய்யவும்.

3. பிறகு save என்பதை க்ளிக் செய்யவும்.

உங்கள் விருப்பமான படம் Favicon-ஆக வந்துவிடும்.

கவனிக்க:

** .ico Format-ல் உள்ள படங்களை மட்டும் தான் ஃபேவிகானாக வைக்க முடியும்.

jpg, jpeg படங்களை .ico Format-ஆக மாற்ற:

1.அந்த படத்தின் மீது Right க்ளிக் செய்து, Properties என்பதை க்ளிக் செய்யவும்.

2. General என்ற tab-ல் ஃபைலின் பெயர் .jpg அல்லது .jpeg Format-ல் இருக்கும். அதனை .jpg, .jpeg என்பதற்கு பதிலாக .ico என [உதாரணத்திற்கு filename.ico] பெயர் மாற்றம் செய்து OK என்பதை க்ளிக் செய்யவும். 

3. ஓகே கொடுத்தபின் "If you change a filename extension, the file might became unusable. Are you Sure you want tochange it?" என்று கேட்கும். "Yes" என்பதை தேர்வு செய்யவும்.

தற்போது உங்கள் படம் .ico Format-ற்கு மாறிவிடும்.

** நீங்கள் தேர்வு செய்யும் படம் 10KB-குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு மேலானவற்றை ப்ளாக்கர் ஏற்றுக் கொள்ளாது.

இது பற்றிய ப்ளாக்கரின் அறிவிப்பு:
 Blogger in Draft: Customize Your Favicon