கடந்த பதிவில் பேஸ்புக் பேன் பேஜ்
என்னும் ரசிகர் பக்கத்தை உருவாக்குவது எப்படி? என்று பார்த்தோம் அல்லவா?
அப்படி நாம் உருவாக்கிய ரசிகர் பக்கத்தை நமது வாசகர்கள் Like செய்ய வசதியாக
நமது தளத்தில் Like Box Gadget-ஐ வைப்பது எப்படி என்று பார்ப்போம்.
இதனை கடந்த பதிவிலேயே எழுத வேண்டுமென நினைத்தேன். ஆனால் நீளமாக போய்விடும் எனக் கருதி தனிதனியாக எழுதினேன்.
1. முதலில் http://developers.facebook.com/docs/reference/plugins/like-box/ என்ற முகவரிக்கு சென்று உங்கள் பேஸ்புக் கணக்கை கொண்டு உள்நுழையவும்.
2. Facebook Page URL என்ற இடத்தில் உங்கள் facebook Fan Page-ன் முகவரியை கொடுத்து Enter கீயை அழுத்தவும்.
உதாரணத்திற்கு http://www.facebook.com/pages/வலைப்பூ/135662416511018
நீங்கள்
Enter கீயை அழுத்தியவுடன் உங்கள் பக்கத்தின் Like Box மாதிரி காட்டும்.
அவற்றில் நீங்கள் விரும்பினால் சில மாற்றங்கள் செய்யலாம். கீழே உள்ள படத்தை
பார்க்கவும்.
படத்தில் உள்ளவை:
1. Facebook Page URL - உங்கள் facebook Fan Page-ன் முகவரி
2. Width - Like Box-ன் அகலத்தை உங்கள் sidebar-கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம்.
3. Color Scheme
- Like Box-ன் பின்னணி நிறம்(Background Colour). Dark, Light இரண்டில்
ஒன்றை உங்கள் பிளாக் டெம்ப்ளேட் கலரை பொறுத்து தேர்ந்தெடுக்கவும்.
4. Show Faces
- நமது பக்கத்தை லைக் செய்தவர்களின் புகைப்படங்கள் தெரியவேண்டும் எனில்
Check Box-ல் செலக்ட் செய்யவும். வேண்டாமெனில் அதனை வெறுமனே
விட்டுவிடுங்கள்.
5. Border Color - Box-ன் பார்டர் கலர். Black, Red, Blue இப்படி நீங்கள் விரும்பும் நிறத்தை கொடுக்கவும்.
6. Stream
- நீங்கள் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் பகிர்பவைகள். அவைகள் தெரியவேண்டும்
எனில் Check Box-ல் செலக்ட் செய்யவும். வேண்டாமெனில் அதனை வெறுமனே
விட்டுவிடுங்கள்.
7. Header
- பாக்ஸின் மேலே "Find us on Facebook" என்னும் தலைப்பு. அது
தெரியவேண்டும் எனில் Check Box-ல் செலக்ட் செய்யவும். வேண்டாமெனில் அதனை
வெறுமனே விட்டுவிடுங்கள்.
8.மேற்சொன்ன மாற்றங்களை செய்தபின் Get Code என்பதை க்ளிக் செய்யவும்.
9. க்ளிக் செய்த உடன் ஒரு விண்டோ ஓபன் ஆகி அதில் உங்களுக்கான Code காட்டும். அதில் XFBML என்னும் Code-ஐ காப்பி செய்துக் கொள்ளுங்கள்.
Like Box-ஐ பிளாக்கரில் வைக்க:
1. Blogger Dashborad => Design => Page Elements பக்கத்திற்கு செல்லவும்.
2. Add a Gadget என்பதை க்ளிக் செய்து, Html/Javascript என்பதை தேர்வு செய்யவும்.
3. அங்கு தலைப்பு ஏதாவது கொடுத்துவிட்டு, Content பகுதியில் நீங்கள் காப்பி செய்த Like Box-ன் Code-ஐ பேஸ்ட் செய்யவும்.
4. பிறகு Save என்பதை க்ளிக் செய்யவும்.
அவ்வளவுதான்...!
கவனிக்க:
Facebook
Fan Page-ல் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவை எல்லாவற்றையும்
நீளம் கருதி ஒரே பதிவில் பதிவிடமுடியவில்லை. இறைவன் நாடினால் ஒவ்வொன்றாக
பகிர்கிறேன்.
http://bloggernanban.blogspot.com/2011/06/like-box.html