முகப்புத்தகம்,
முகநூல் என்று தமிழில் அழைக்கப்படும் ஃபேஸ்புக் தளம் இணைய உலகை ஆட்சி
செய்துக்கொண்டிருப்பதற்கு மேலும் ஓர் உதாரணம் அதிகமான தளங்களில் காணப்படும்
"ரசிகர் பக்கம்" எனப்படும் Fan Page ஆகும். நமக்காக ஒரு ரசிகர் பக்கத்தை
உருவாக்கும் முறையை இங்கு பார்ப்போம்.
1. முதலில் உங்கள் Facebook கணக்கைக் கொண்டு உள்நுழையுங்கள். உங்களுக்கு ஐடி இல்லையென்றால் புதிதாக ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
2. பிறகு http://www.facebook.com/pages/create.php/ என்ற முகவரிக்கு செல்லுங்கள்.
3. அங்கு ஆறு விதமான Options இருக்கும். அதில் “Brand or Product” என்பதை க்ளிக் செய்யவும்.
4.
பிறகு Drop Down Box-ல் Website என்பதை தேர்வு செய்து, கீழே உங்கள்
ரசிகர் பக்கத்திற்கான பெயரை டைப் செய்து, பின் "I agree to Facebook Pages
terms" என்பதில் Check செய்து, "Get Started" என்பதை க்ளிக் செய்யவும்.
5.
பிறகு உங்கள் Fan Page-ன் Dashboard பக்கத்திற்கு வந்துவிடும். அங்கு
மீண்டும் ஒரு முறை உங்கள் Fan Page-ன் பிரிவை (Category) உறுதி செய்ய
சொல்லும்.
6.
அங்கு முதல் Drop Down Box-ல் "Websites&Blogs" என்பதனையும்,
இரண்டாவது Drop Down Box-ல் "Personal Blog" அல்லது உங்களுக்கு விருப்பமான
பிரிவை தேர்வு செய்து, "Update Category" என்பதை க்ளிக் செய்யவும்.
7. பிறகு "Upload an Image" என்பதை க்ளிக் செய்து, உங்கள் ஃபேன் பேஜ் காக உங்கள் விருப்பமான படத்தை மாற்றிக் கொள்ளவும்.
8. பிறகு "Edit Info" என்பதை க்ளிக் செய்து, பின் Basic Information என்பதை க்ளிக் செய்யவும்.
9.
அங்கு உங்கள் தளம் பற்றிய விபரங்களை கொடுத்து "Save Changes" என்பதை
க்ளிக் செய்யவும். [இதனை செய்யும் போது ஒழுங்காக Update ஆகவில்லைஎனில்,
ஒவ்வொன்றாக கொடுத்து Update செய்யவும்.]
10.
பிறகு இடது புறத்தில் "Manage Permissions" என்பதை க்ளிக் செய்து, சில
மட்டுறுத்தல்களை உங்கள் விருப்பப்படி செய்துக் கொள்ளலாம்.
நாம் உருவாக்கிய பேஸ்புக் பக்கத்தின் முகவரியை அறிய:
மேற்சொன்னவாறு
நாம் மாற்றங்கள் செய்துக் கொண்டிருக்கும் போது, வலது புறம் மேலே View Page
என்ற பட்டன் இருக்கும். அதனை க்ளிக் செய்யுங்கள். உங்கள் பக்கம்
வந்துவிடும். அங்கு Address Bar-ல் இருக்கும் முகவரி தான் உங்கள் ரசிகர்
பக்கத்தின் முகவரியாகும்.
உங்கள் ரசிகர் பக்கம் பின்வருமாறு காட்சி அளிக்கும்.
நமது
ரசிகர் பக்கத்திற்கான Like Gadget-ஐ உருவாக்குவது எப்படி? என்றும், நமது
பக்கத்தை மேம்படுத்துவது எப்படி? என்றும் இறைவன் நாடினால் அடுத்தடுத்துப்
பார்ப்போம்.