
குறைவாக இருக்கும். அவர்களின் கட்டுரை ஏதோ இடமில்லாமல் நெருக்கி எழுதப்பட்டதைப் போல இருக்கும். சில அடைப்பலகைகளில் சைட்பாரின் அகலம் அதிகமாக இருக்கும். இதில் எதற்கு இவ்வளவு இடம் என்று தோன்றும். இவை இரண்டையும் நமக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பது எப்படி?
கட்டுரைகள் நன்றாக விசாலமாக தெரிவதற்கு main பகுதியின் அகலத்தைக் கூட்டியும் சைடுபாரின் அகலத்தை குறைத்தும் வைத்துக்கொள்ளலாம். இல்லை சைடுபாருக்கு கொஞ்சம் அகலம் தேவையென்றால் main பகுதியில் குறைத்து சைடுபாரில் அளவை கூட்டிக்கொள்ளலாம்.
லேஅவுட் முறையில் அமைந்த அடைப்பலகைகளில் அதன் HTML கோடிங் சென்று CSS வரிகளை மாற்றுவதன் மூலம் விரும்பிய அளவுக்கு வலைத்தளத்தின் அகலத்தை வடிவமைக்கலாம்.

1 .outer_wrapper - என்பது அடைப்பலகையின் மொத்தமான பகுதியாகும். இதற்குள் தான் மற்றவையான header_wrapper, main_wrapper, sidebar_wrapper போன்றவை அடங்கும்.
2.header_wrapper - என்பது வலைத்தளத்தின் தலைப்புப் பகுதியை மட்டும் குறிக்கும்.
3.main_wrapper - என்பதில் பதிவுகள் (Posts) இருக்கும் பகுதியை குறிக்கும்.
4.sidebar_wrapper - என்பதில் வலைத்தளத்தின் வலது பக்கம் இருக்கும் சைடுபாரைக் குறிக்கும்.
outer_wrapper பகுதியின் அகலமும் header_wrapper பகுதியின் அகலமும் ஒன்றாக இருக்க வேண்டும். ஏன் என்றால் மேலிருந்து கீழாக இவை தொடர்ச்சியாக வரும் பகுதிகளாகும். இவற்றின் அளவுகள் px (pixels) எனக் குறிப்பிட வேண்டும். இதன் அதிகபட்ச அளவாக 1000px வரை குறிப்பிடலாம். இதற்கு மேல் போனால் நன்றாக இருக்காது.
மேலும் main_wrapper பகுதியின் அகலத்தையும் sidebar_wrapper பகுதியின் அகலத்தையும் கூட்டினால் outer_wrapper பகுதியின் அகலத்திற்கு சரியாக வரவேண்டும்.
outer_wrapper = main_wrapper + sidebar_wrapper .
இவை இரண்டுக்கும் 50 புள்ளிகளுக்குள் வித்தியாசம் இருந்தால் நன்றாக இருக்கும்.(எ.கா)
outer_wrapper = 1000px
main_wrapper = 700px
sidebar_wrapper = 250px
செய்யும் முறை :
பிளாக்கர் தளத்தில் சென்று Design -> Edit Html என்பதை கிளிக் செய்யவும். பின்னர் மேலே சொன்ன நான்கு பகுதிகளையும் Ctrl+F கொடுத்து தேடி width என்ற வரியில் உள்ள மதிப்புகளை குறித்துக்கொள்ளவும். பின்னர் உங்களுக்கு வேண்டிய பகுதியின் அகலத்தை கூட்டியும் குறைத்தும் அழகுபடுத்தலாம்.

இதனை செய்வதற்கு முன்னர் உங்கள் வலைதளத்தை ஒருமுறை பேக்கப் எடுத்துக்கொள்வது நலமாகும்.
http://ponmalars.blogspot.com/2011/03/how-to-change-width-of-blogger.html
|