சமீப பதிவில் navbar-ஐ நீக்குவது எப்படி? என்பது பற்றி பார்த்தோம் அல்லவா?. Navbar-ல் உள்ள சிறப்பு, நாம் ப்ளாக்கர் Dashboard-க்கு போகாமலேயே புதிய பதிவுகளை பதியலாம், Design பக்கத்துக்கு சென்று மாற்றம் செய்யலாம். Navbar-ஐ நீக்கிவிட்டால் நாம் ஒவ்வொரு முறையும் Dashboard-க்கு செல்ல வேண்டும். அதற்கு மாற்றாக உள்ளது தான் Admin Gadget.
Admin Gadget மூலம் நாம் நமது தளத்திலிருந்தே Dashboard-ல் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்யலாம். அதை எப்படி இணைப்பது என்று பார்க்கலாம்.
1. முதலில் Blogger Dashboard=>Design=>Edit Html செல்லவும்.
Expand Widget Templates என்பதை கிளிக் செய்ய வேண்டாம்.
Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.
2. உங்கள் ப்ளாக்கின் ஐடி (BlogID) எண்ணை கண்டுபிடிக்கவும்.
ஒவ்வொரு ப்ளாக்கிற்கும் பிரத்யேகமான எண் உண்டு. அது Blog ID எனப்படும். Edit Html பக்கத்திற்கு வந்தபிறகு முகவரியை (URL) பார்க்கவும். அது கீழ் உள்ளவாறு இருக்கும்.
மேலுள்ள படத்தில் blogID என்பதற்கு பக்கத்தில் உள்ள எண் தான் அது. அந்த எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
3. பிறகு
<b:section class='sidebar' id='sidebar' preferred='yes'>

Admin Control Panel

New Post

Settings

Design

Edit HTML

Moderate Comments

Sign Out

4. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.
இனி நீங்கள் உங்கள் ப்ளாக்கில் இருந்துக் கொண்டே Dashboard வேலைகளை செய்யலாம்.
நீங்கள் பார்க்கும் பொழுது உங்கள் ப்ளாக் இவ்வாறு இருக்கும்:
வாசகர்கள் பார்க்கும் பொழுது இவ்வாறு இருக்கும்:
பிரிவுகள்:
Blogger,
ப்ளாக்கர் டிப்ஸ் - Blogger Tips,
ப்ளாக்கை அழகுபடுத்த