பொதுவாக நிறைய பதிவு எழுதும் பதிவாளர்களின் வலைபூக்களில் Page Number
இருப்பதில்லை. Older Post என்றுதான் இருக்கும். இதனால் தொடர்ந்து ஒவ்வொரு
பக்கமாகதான் நாம் ஊர்ந்து செல்ல வேண்டியதாக இருக்கும். 200, 300 பதிவு உள்ள
வலைபூக்களில் இது ரொம்ப கடினமான வேலையாகிவிடும். இதனால்
படிப்பவர்களுக்கும் சோர்வடைந்து விடுவார்கள். இங்கே நான் சொல்ல போவது,
வலைபூவில் உள்ள ஒவ்வொரு பக்கத்திற்க்கும் போக Page Number இருந்தால் வேலை
சுலபமாகிவிடும். பார்பதற்கும் அருமையாக இருக்கும்.