இணையதளத்திற்கு வரும் அத்தனை நண்பர்களுடன் உரையாட எளிதாக நம் தளத்தில் எந்த மென்பொருள் அல்லது ஸ்கிரிப்ட் எதையும் நிறுவ வேண்டாம் , சில நொடிகளில் நாம் தளத்திற்கு வந்து நம்மிடம் பேச விரும்பும் அனைவரிடம் பேசலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://chattp.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி நம் வலைப்பூவின் முகவரியை கொடுத்து Charrify என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நமக்கு ஒரு சுருக்கப்பட்ட முகவரி ( Short Url )கிடைக்கும். இந்த முகவரியை நம் தளத்தில் கொடுத்தால் போதும் நம்முடன் நேரடியாக சாட் செய்ய விருப்பம் உள்ளவர்கள் , நம் தளத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால் குறிப்பிட்ட நேரம் கொடுத்து அந்த நேரத்தில் நம்மிடம் நேரடியாக பேசலாம் என்று கூட சொல்லலாம் , அந்த முகவரியை சொடுக்கி யார் வேண்டுமானாலும் நம்மிடம் நேரடியாக சாட் செய்யாலம் , எந்த பயனாளர் கணக்கும் தேவையில்லை அதுவும் சில நொடிகளில் , புதுமை விரும்பிகளுக்கு கண்டிப்பாக இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
http://winmani.wordpress.com/2011/06/12/livechat-ourblog/
|