Showing posts with label labels. Show all posts
Showing posts with label labels. Show all posts

Sunday, July 17, 2011

பிளாக்கர் வலைப்பதிவில் லேபிள்களை சுருக்க விரிக்க எளிமையாக்க


பிளாக்கர் வலைப்பதிவுகளில் எழுதும் ஒவ்வொரு பதிவுகளுக்கும் நாம் லேபிள்கள் (Labels) எனப்படும் வகைகள் கொடுப்போம். வகைகள் கொடுப்பதால் படிப்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட வகையில் மற்ற பதிவுகளை எளிதாகப் பார்ப்பதற்கும் தேடுவதற்கும் உதவுகின்றன. இந்த வகைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் நேரத்தில் வலைப்பதிவின் முக்கிய இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இவைகளை சுருக்கி வைத்துக் கொண்டால் தேவைப்படும் நேரத்தில் மட்டும் அதை கிளிக் செய்தால் அது விரிந்து எல்லாவற்றையும் பார்க்க முடியும். படிப்பவர்களுக்கும் எளிதாக இருக்கும். வலைப்பதிவின் இட நெருக்கடியும் குறையும்.