Thursday, August 11, 2011

பெரிய புகைப்படங்களின் அளவை சுருக்காமல் உங்கள் வலைப்பூவில் காட்டஅருமையான வழி.

பெரிய அளவுள்ள புகைப்படங்களை நம் வலைப்பக்கத்தில் போடுவதால் இடங்களை அடைத்துக்கொள்ளும் என்ற கவலை இல்லாமல் படத்தின் அளவை சுருக்காமலும் நம் வலைப்பூவில் காட்டலாம் எப்படி என்று ஆச்சர்யமாக இருக்கிறதா ? , இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
சில நேரங்களில் பெரிய அளவிலான புகைப்படங்களை நம் வலைப்பக்கத்தில் காட்டலாம் என்று பார்த்தால் நம் தளத்தின் வடிவமைப்பு பெரிய அளவுள்ள படங்களுக்கு துணை புரியாமல் இருக்கலாம் ஆனால் இனி நம்மிடம் இருக்கும் பெரிய அளவுள்ள புகைப்படங்களின் அளவை சுருக்காமல் நமக்கு காட்டுவதற்கு உதவியாக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://bigimg.it

இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி எந்த படத்தை காட்ட வேண்டுமோ அதன் Image URL (படத்தின் நீளம் மற்றும் அகலம் பற்றி யோசிக்கமால் எவ்வளவு பெரிய படத்தின் URL முகவரியும் கொடுக்கலாம்) கொடுத்து Next என்ற பொத்தானை அழுத்த வேண்டும். அடுத்து வரும் திரையில் நம் வலைப்பூவில் படத்திற்காக எந்த அளவு வைத்திருக்கிறோமோ எந்த அளவை தேர்ந்தெடுத்து Next என்ற பொத்தானை அழுத்த வேண்டும். அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்த அளவில் படம் காட்டப்படும் அடுத்து அங்கு இருக்கும் Next என்ற பொத்தானை சொடுக்கினால் Copy-and-paste this HTML in place of the original image என்ற கட்டத்திற்குள் இருக்கும் Iframe code -ஐ காப்பி செய்து நம் வலைப்பூவில் தேவையான இடத்தில் படத்தை வைத்துக்கொள்ளலாம். இதில் நாம் படத்தை சொடுக்கி வலது பக்கம், இடது பக்கம், Zoom In , Zoom Out செய்து பார்க்கலாம். கண்டிப்பாக பெரிய அளவிலான படங்களை வலைப்பூவில் காட்ட விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
http://winmani.wordpress.com/2011/05/17/bigimage-it/