Thursday, August 11, 2011

நம் வலைப்பூ-க்கு அழகான பேக்ரவுண்ட் (Background ) சில நிமிடங்களில் வடிவமைக்கலாம்.

புதிதாக இணையதளம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் முதலில் அதிக முக்கியத்துவம் கொடுப்பது பேக்ரவுண்ட்-க்கு தான், காரணம் சில வகையான பேக்ரவுண்ட்கள் பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும். பெரும்பாலும் இணையத்தைப் பொருத்தவரை ஒரே மாதிரியான பேக்ரவுண்ட்கள் தான் வலம் வருகிறது , ஆனால் இனி நம் விருப்பப்படி அழகான பேக்ரவுண்ட் வடிவமைக்கலாம் அதுவும் சில நிமிடங்களில் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


படம் 1
இணையதளம் ஆரம்பிப்பதும் வீடுகட்டுவதும் ஒன்று தான் வீடு கட்டும் போது ஒவ்வொரு அறையும் எப்படி இருக்கவேண்டும் என்பதில் தொடங்கி வீட்டிற்கு எந்த அழகான வண்ணம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதை தேர்ந்தெடுக்கவே நமக்கு காலம்  அதிகமாக செலவாகிறது இதே முறை தான் இணையத்திலும் நமக்கு விருப்பமான வண்ணம் அல்லது டிசைன் பேக்ரவுண்ட்-ல்  இருந்தால் நன்றாக இருக்கும் எண்ணுபவர்களுக்கு உதவுவுதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://bgmaker.ventdaval.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும் கட்டத்திற்குள் நமக்கு விருப்பமான வண்ணத்தை கொடுத்து பார்க்கலாம் ஒவ்வொரு வண்ணமும் தேர்ந்தெடுத்து  மேல் இருக்கும் + மற்றும் – என்பதை சொடுக்கி ஒரு அழகான டிசைன் எளிதாக அதுவும் சில நிமிடங்களில் உருவாக்கலாம். இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா, உருவாக்கிய டிசைனை  உடனுக்கூடன் பேக்ரவுண்ட்-ல் பார்த்துக்கொள்ளலாம். மில்லியன் கணக்கில் டிசைன் இதில்  ஒளிந்திருக்கிறது, அழகான டிசைனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள்  சில மணி நேரம் செலவு செய்தால் தாங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அழகான  டிசைன் உருவாக்கலாம். டிசைன் உருவாக்கியபின் Save image என்பதை சொடுக்கி  இந்தப்படத்தை PNG கோப்பாக சேமிக்கலாம். பின் நம் தளத்தில் Background image- என்பதில்  நாம் உருவாக்கியப் படத்தை வைக்கலாம். இணையதள வடிவமைப்பு வாசிகளுக்கும் புதுமை
விரும்பிகளுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
http://winmani.wordpress.com/2011/07/16/background-design/